முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆலய மெனக்கொண் டெம்மனத் தமர்ந்த
       வருட்சிவ ஞானதே சிகவெம்
பாலைய மலர்க்கண் ணிரண்டுடை யாய்க்குப்
       பார்வைமூன் றுளனெனப் படுவோன்
மேலவ னென்னி லவற்குநா லிருகண்
       விண்ணவ னுயர்ந்தவ னவற்குச்
சாலவு மதிக னாவனா யிரங்கட்
       டவளமார் கவளவா ரணனே.
(73)