முகப்பு தொடக்கம்

 
புயவகுப்பு
இசைபோகி மாழ்கமத னம்பைக் கடிந்தன
       விளநாக வீருரியொ டென்பைத் துரந்தன
வசைபோகு மாரநிகர் கண்டிக் கிசைந்தன
       மகமேரு வாதிவரை யஞ்சக் கிளர்ந்தன
நசைபோகு மாதவர்க டுன்பைத் துரந்தன
       நயநீறு தேய்வையென விஞ்சத் திமிர்ந்தன
திசைபோகு தூயதமிழ் தங்கப் புனைந்தன
       சிவஞான தேசிகர்தம் வென்றிப் புயங்களே.
(42)