|
இளைக்கு மருங்கு லொருமடந்தைக் கெய்து தவள முகிற்கூந்த லிருஞ்சூன் முகிலி னிருள்படைப்ப விருண்ட வடியே னுளம்விளர்ப்பத் திளைக்கு மலர்க்கட் கருணைமடை திறக்குங் குணப்பொற் குன்றையுயர் சிகர மயிலைச் சிவஞான தேவன் றனைநா டொறுங்காக்க விளைக்குந் தவத்தாற் பால்தனக்கு விரும்பிக் கொடுத்த கொழுநன்மணி மிடறே போல வெனதுபுன்சொல் விடமுண் கின்ற திருச்செவியை முளைக்குந் தரள நகைவாயான் முதிர்தீஞ் செய்யு ளமுதூட்ட முன்னம் பிள்ளைப் பெருமாளை முலைப்பா லூட்டு மொருதாயே.
|
(3) |
|