முகப்பு தொடக்கம்

இணையி றிருவள் ளுவப்பெயர்கொ ளெம்மான் கரப்பா ரிரவன்மி
       னென்ன விரந்து மிரத்தக்கார்க் காணி னிரக்க வென்றுரைத்தும்
உணர்வு தெருள்வித் தமைகொண்டே யொருவர் தமையு மிவ்வளவு
       மொன்று மிரந்தா மல்லமியா முன்னை யின்றீங் கிரக்கின்றாம்
அணையு மவர்தம் முகக்குறிப்பா னறிந்தங் கவர்த மகம்விழைந்த
       வனைத்து மமுத முறழீர மளைந்த வின்சொ லுடனளிக்கும்
முணையில் கொடைச்சிந் தாமணியே முகிலே முத்தந் தருகவே
       முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.
(5)