முகப்பு தொடக்கம்

இறைவற்கு தக்க விறுமாப் பெனுமொழி யின்றியொரு
மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக்
குறைவற்ற நெற்கொண் டுலகேற் றுனைப்பலி கொள்ளுமரன்
பெறவுற் றனையனை யேகுன்றை வாழும் பெரியம்மையே.
(1)