முகப்பு தொடக்கம்

உள்ளத் துறுபிணி யேற்கு மருந்துக்கென் றுன்னைவந்து
மெள்ளத் தொழவுந் திருமுலைப் பான்மெல் விரனுதியாற்
றெள்ளித் துளியள வாயினுந் தொட்டுத் தெறித்திலையுன்
பிள்ளைக்குங் கிள்ளைக்கும் பால்கொடுத் தாலென் பெரியம்மையே.
(15)