முகப்பு தொடக்கம்

உரைசெயு மெவற்று மெனைநேர் வுறநகர் கனத்த திலையா
       லெனவுல கமிழ்த்து கடைநா ளொலிகடன் மிதக்கு நகர்வாழ்
அருள்வடிவ வொப்பி லுமையா ளணிமுலை கறக்கு மருளா
       ரமுதமுண மிக்க விழைவா லழுதகுழ விக்கு நிகராய்
வருநக ரனைத்தும் வனையா மழையிய முழக்கி யெதிர்வார்
       வரவர விருப்ப முறுமூர் தொறுமலி தவத்த ருடனே
திருவடி வருத்தி வருவாய் சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராயய் சிறுபறை முழக்கி யருளே.
(10)