முகப்பு தொடக்கம்

உள்ளமென் மனையில் விருப்பொடு வெறுப்பா
      முறுகுழி மேடுக ணிரவி
யொழிவிலா வாய்மை மெழுக்கினாற் பூசி
      யுயர்தரு மனமெனப் படுமோர்
பள்ளிமென் றவிசி லிருத்திநின் பதியைப்
      பழுதில்யா னெனப்படு நெல்லைப்
பழமல மாயைத் தவிடுமி போக்கிப்
      பாகஞ்செய் தென்றருத் திடுவாய்
துள்ளுமொண் மறிமான் முல்லையு ளாயர்
      சூழல்வெண் ணெய்க்குட முருட்டித்
துணைமுலைக் குவட்டின் மஞ்சண்மேற் படப்போய்த்
      தோய்ந்துநின் றாடிளங் கயற்கட்
கிள்ளைமென் மொழியார் துகிலெடுத் தொளித்துக்
      கேடில்சீர்க் கண்ணனா டுதல்போற்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(5)