முகப்பு தொடக்கம்

 
வேறு
ஏதி லார்களிகழ் காம நோயதுற வேற றங்கடை யுடையநா
       மேது போவதென வேயி ராதிமுன மீறில் வெம்பவ மருவுமோர்
தீ தி னானினிற நாம னாமொருவன் ஞானி யங்கழல் செறியவே
       தேறி நீவருதி யாலெ னாவினைக டீகொள் பஞ்சென வழியநால்
வேத மாமுடியி னோது மோர்பொருளை மேனி யிந்திய முதலவாய்
       மேவு பாதிகளை மோதி யோர்மொழியில் வேற றும்படி யுதவினான்
ஆத லாலிவனு மோகை யாலருளு மாட வம்புலி வருகவே
       யாசி லாதசிவ ஞான தேவனுட னாட வம்புலி வருகவே
(7)