முகப்பு தொடக்கம்

ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந்
        தோகைபெறு மன்றியுடைமை
    உதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத்
        துள்ளதிற் பெரிதளிக்கும்
பொருளதா யினுமதனி னினியதா யினுமவன்
        புந்திமகிழ் வுற்றிடுவனால்
    புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு
        புண்ணியத் தெய்வநதிதான்
மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை
        மற்றென்முடி யிற்றெறிப்பின்
    வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை
        மக்கணினை வுற்றுய்ந்திட
அருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந்
        தபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(4)