முகப்பு தொடக்கம்

ஒருமா தர்ப்பிறை வாணுதன் மைக்கண் மலர்க்கோதை
       யுமைகா ணக்கம லாலய னொத்துற நற்றாளம்
வருமான் வத்திர னார்கொளு மத்தள முற்பேச
       மகிழ்வீ ணைத்தொழி லாரிசை யொத்திசை யப்பாட
இருமா தர்க்குயி ராமுரு கற்பெறு நிட்காம
       விறையா டப்புல வோர்புனை மெய்க்கவி தைப்பேர்கொள்
திருமா லைப்புய மாதவ கொட்டுக சப்பாணி
       சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
(8)