முகப்பு தொடக்கம்

கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த
சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தொல்லுலகின்
நற்றாண் மகற்பெறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப்
பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே.
(12)