முகப்பு தொடக்கம்

கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக்
        கிரசித்த மென்னும்விரதங்
    கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு
        கின்றவிந் திரியார்ப்பிதம்
உடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ
        னுண்மைகொ ளிலிங்கநிசமே
    உயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி
        லொன்றாகி நின்றுபேதம்
விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு
        மிக்ககுரு வருள்புரியவே
    மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும்
        வேதமுடி யாவுமுணரா
தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(8)