|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
கீற்றுப் பிறையை யணிந்ததிரு வெங்கை விருத்த கிரிநாதன் ஆற்றுப் பொருளைக் குளத்திலொரு புலவர்க் கழைத்தன் றருளினோன் சோற்றுத் துறையுந் திருநெய்த்தா னமுமீங் குடையான் சுழலாமல் தோற்றுப் பசிநோய் தொலைப்பனவன் றனையே துதியீர் புலவீரே.
|
(8) |
|