முகப்பு தொடக்கம்

குதலை மொழிமருள் பேதை பிலநதி மட்டுவார்
       குவளை மதர்விழி மாலை மதியைம ருட்டுவாள்
நுதலை வழிபட வேகி மறியும்வி யப்பொடே
       நுவலி லளவில வாகும் வளமலி கச்சியாய்
திதலை முலைமட மாதர் கொடுமய லிற்படார்
       திகழு மனமுடை வாய்மை நெறியறி ஞர்க்கெலாம்
மதலை யெனவரு தூய பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(9)