முகப்பு தொடக்கம்

 
நேரிசையாசிரியப்பா
கைகமழ் நறிய கறியொடு படூஉம்
           மென்மைவெள் ளடிசி லின்மை மாந்தி
           விலைவரம் பறியா மென்றுகி லின்மை
           நாடொறு முடுத்து நகைமணிப் பசும்பொற்
           5.         பூண்டன தின்மை காண்டகப் புனைந்து
           திண்குற டுரிஞ்சுஞ் செழுஞ்சாந் தின்மை
           பூசிப் பொன்மலி புரிசை மாடத்
           தின்மையின் மலர்ப்பூம் பள்ளி யின்மையிற்
           கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தொடி
           10.         இளமுலை மாத ரின்மையொடு தழீஇ
           வாழா நின்றநின் வண்புகழ் பாடும்
           நல்லிசைப் புலவர் நற்பொரு ளின்மை
           கண்டது பொறாது கவலைகூர்ந் தழிக்கும்
           நின்னை யென்னோ நிலமிசை மாந்தர்
           15.         அழுக்கா றிலனென வழுக்கா தறைகுவர்
           தவப்பல விடர்செய் பவப்பிணி மருத்துவ
           கலங்குறு தன்மைப் புலந்தெறு வீர
           அடியார் கொள்ள மிடியாச் செல்வ
           நானிலம் புகழ்சிவ ஞான தேவ
           20.         அடியே மருளா தறிதரக் கூறுதி
           என்றவன் றனையே யாம்வினா யறிகுதும்
           நங்கண் களிப்ப நண்ணு மாயின்
           அணியென விறங்குவெள் ளருவி
           மணிமலி மயிலை மலைகிழ வோனே.
(46)