|
களி. எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
கொண்டறவழ் மணிமாட மலிந்த வெங்கைக் கோவிடங்கொள் பெரியநா யகியெம் மன்னை தண்டரள நகையுமையாள் கருணை தன்னாற் றாலத்து வந்தகுருக் களையுட் கொண்டு கண்டவர்க ளதிசயிப்பப் பரமா னந்தக் களிப்படைந்து கரணமுடல் புலன்க ளெல்லாம் உண்டெனவு மிலையெனவு முணர்ந்தி டாம லுணர்வுகடந் திருக்கின்ற களியர் யாமே.
|
(63) |
|