முகப்பு தொடக்கம்

கொந்தார் மலரு நறும்புகையுங் கொண்டு நினையாந் தொழத்தக்க
       குலதே வதையாய் வழிபட்டுக் குறித்துப் பணிதுஞ் செங்கரும்பே
நந்தா விளக்கே யமுதமே ஞான வடிவே நாயகமே
       நாடும் பொருளே யென்றென்று நாளு நினையே பாடுதும்யாம்
வந்தார் தமது பிணிதீர்க்கு மருந்தாய்ப் பணியு மரசர்முடி
       மணியா யெமக்கோர் பற்றாய வரிவண் டொழுகு மதுவுண்ணுஞ்
செந்தா மரைச்சே வடிநோவச் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
       சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே.
(6)