முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
கொள்ளைக் கதிர்முத்தின் பந்தருஞ் சின்னமுங் கொள்ளமொரு
பிள்ளைக் கதுதகு நாவர சாய பெருந்தகையோய்
கள்ளைக் குவளை யுமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ
வள்ளைக் குழையுமை பங்காளர் கையிலென் வாங்கினையே.
(10)