முகப்பு தொடக்கம்

கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வர்-அம்மா
முளைக்கு மெயிறு முதிர்சவைநா விற்கு
விளைக்கும் வலியனதா மென்று,
(27)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகன நண்ணாரே-வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகமொண் பொருள்.
(25)