|
கற்ற புலவர் மிகச்சிறந்து காட்டு மொன்றன் வளமெடுத்துக் கவியால் விரித்துப் புகன்றியம்பக் கருதி யதுபொற் குன்றநாண் உற்ற மணிப்பொற் கோபுரமோ வொளிர்பொன் மாட மோமுகில்வந் துறங்கு மதிலோ மாளிகையோ வுலவு திருத்தேர் மறுகோசீர் பெற்ற குடிகண் மனைவளமோ பிரச மலர்த்தண் டலையோநீர் பெருகு தடமோ வெனவிறைவி பிறங்கு கோயிற் றிசைபோல முற்ற மயங்குஞ் சீர்க்காஞ்சி முதல்வா முத்தந் தருகவே முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.
|
(4) |
|