|
கடியிற் சிலகஞ் சுகமனிதர் கல்வீழ் மணிநீர்க் குவளைமலர்க் கயத்துப் பாசி யெனவொதுங்கிக் கடிதின் முன்ன ரெனநெருங்கிப் படியிற் பணியக் கிடையாமற் பாம்பின் றலையிற் பெருஞ்சுமையைப் பகைதீர்த் தொருசெங் கோலோச்சிப் பாது காக்கு முடிமன்னர் தொடியிற் பொலிந்த கரங்கொண்டு துடைத்துத் துகடம் முடற் கணிந்து சுடர்மா மணிப்பொன் மகுடத்திற் சுமப்பச் சிறந்த நினதுதிரு அடியிற் புழுதி படும்வண்ண மடியேஞ் சிற்றி லழியேலே யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
|
(1) |
|