முகப்பு தொடக்கம்

கண்டீர வந்தனை நேர்ந்தாங் கருகக் களிற்றினைமுன்
கொண்டீர வந்தனை வானேர் செயுமுது குன்றனெடு
வண்டீர வந்தனை நேர்வாளைக் கோலம் மதனனெய்யும்
புண்டீர வந்தனை சேர்தியென் றோதுமின் போமின்களே.
(73)