|
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
சிவனாலு மறையாலு முணர்வி னாலுந் தெரியாத பரன்வெங்கை யரசன் றன்மா தவனாலு மயனாலு மலரி யாலுஞ் சசியாலுங் குருவாலு மமரர் கோவாம் அவனாலுங் குகனாலு முனிவ ராலு மரவாலுஞ் சுரராலும் புலவ ராலும் எவராலும் வெலற்கருமைம் புலன்கள் வென்ற வெழிலடியார் பெருமைதனை யியம்பொ ணாதே.
|
(60) |
|