|
சிவமுட னமூர்த்தி மூர்த்திகர்த் திருவஞ் செயன்மலி கருமமென் றருநூல் செப்புதத் துவமுஞ் சதாசிவ னீசன் றிகழ்தரு பிரமனீ சுரனோ டுவமையி லீசா னப்பெய ரவனென் றுரைத்திடு மூர்த்திக டாமும் உற்றவீ சான முதற்பிர பாவ முடையநின் றன்னையென் றுணர்வேன் புவிமுத லனைத்து மாக்குத லளித்தல் போக்குத லுயிர்வினை யருத்தல் புதிதுறச் செம்பிற் களிம்பென வறிவைப் புணர்மல மகற்றுத லென்னும் இவைபல வியைந்தும் விகாரமொன் றின்றி யிரவிபோ னின்றகா ரணனே இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(7) |
|