|
ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா |
|
சீர்பூத்த நிறைமதிமான் றிருக்கரங்கொண் டம்மதியை ஏர்பூத்த சடாமௌலிக் கியையவீர்ந் தனையிருத்தி மற்றையவோர் பகவுமணி மார்பகத்திற் கிடந்திமைப்பக் கொற்றவநீ யிருங்கேழற் கோடெனப்பூண் டருளினைகொல் பூம்புனலோ பொன்முடிக்கட் புல்லோநஞ் சுமிழெயிற்றுப் பாம்பினமோ கண்டுனது பாணியின்மான் றாவுவதே.
இது ஆறடித்தரவு. |
|
|