|
சீர்வளர் குவவுத் திண்டோண் மாருதி உயிர்தரு மருந்தொன் றுறுதற் பொருட்டு முழுமணி கொழிக்கு முகங்கவி ழருவிக் குன்றமொன் றெடுத்த கொள்கை போலச் 5. சொற்றிறம் விரித்த சுடர்மணிச் செழுஞ்சூட் டுரக வேந்த னொருதலை தரிப்பக் காதல் கூர்ந்து கண்ணகன் ஞாலம் உச்சிக் கொண்ட கச்சிப் பதியும் எறும்பியுயிர் நீங்கி லெறும்பி யீருரி 10. போர்த்துப் போகும் புராதன மலையும் ஆன்பாற் கன்றி யளவில்பல் கறிக்கும் இன்சுவை விளையு மென்சே யூருங் கயிலைபோற் சிறந்த மயிலைமால் வரையும் இடங்கொண் டிருந்த வெங்க ணாயகன் 15. அரன்றிருத் தொண்டர்க் கன்னை போல்வான் புகழுநர்க் கடங்காப் புகழுடைப் பெருந்தகை உலகா யதனுக் கிலகா யுதமாய் அணுமத மோரணு வாகத் துரந்து விசேட மதத்தின் விசேட நீக்கிக் 20. காலவா திக்கோர் கால னாகிக் குருமத நொய்தெனக் கூறி மாற்றிப் பஞ்ச ராத்திரிக் கஞ்சு பகலாய்ச் சைவப் பயிர்க்குத் தண்முகி லானோன் நாந்தொழ வருள்சிவ ஞான தேவன் 25. சமய வாதிக டம்மத நிறுவத் தகர்போல் வாதிற் றாக்குத னோக்கிச் சிரித்துளங் களிக்குஞ் சிவாநு பூதியின் மாண்டிட வெம்மை வைத்தனன் 26. வேண்டிய செய்கவவ் வீணர் தாமே.
|
(67) |
|