முகப்பு தொடக்கம்

செச்சை மலர்புரை வானோடு மேனி திறந்துகொண்டு
கச்சை யரவொன் றசைத்துக் கபாலங் கரத்தெடுத்துப்
பச்சை மயிலனை யார்மனை தோறும் படர்ந்திரக்கும்
பிச்சை யொழிகென் றொருவார்த்தை சொல்லெம் பெரியம்மையே.
(8)