முகப்பு தொடக்கம்

சோதிப் பதியன்றி வேறொரு தெய்வந் தொழுதற்கில்லை
ஓதிற் பிறரென வச்ச முறாம லுயிர்களெல்லாம்
நீதிப் புதல்வர்க ளாயின வாதலி னீகொள்கற்புப்
பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே.
(9)