|
சகலரெனும் பசுக்களைமூ லாதார மென்னுந் தக்கதொழு விடைமலமாந் தாம்பினா லார்த்துப் புகலுமொரு நுகர்வுமிலா துரைநிறுத்திப் பின்னர்ப் பொருந்துகலை யாங்கரத்தாற் கட்டவிழ்த்து விட்டே அகலுநன வெனும்புரத்தி லோட்டியே விடய மாகியபுல் மேய்த்தெமக்கிங் கமுதமருள் பவனே திகழுமலை மகள்நகரின் மருவுசிவ ஞான தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
|
(2) |
|