முகப்பு
தொடக்கம்
தத்துவமாந் திரையெழுந்த தனிமாயைப் பெருங்கடலுன்
மெய்த்ததாட் புணையன்றி வேறொன்றாற் கடப்பரிதே
மைத்திரைவார் கடலியன்ற மரக்கலங்கொண் டன்றுபோய்
இத்தரைவாழ் மனிதர்கடந் தேறுவதற் கொன்றுண்டோ.