|
திருக்குறு மழுக்கா றவாவொடு வெகுளி செற்றமா கியமன வழுக்கைத் தியானமென் புனலாற் பொய்புறங் கூற றீச்சொலென் கின்றவா யழுக்கை அருட்கிளர் நினது துதியெனும் புனலா லவத்தொழி லென்னுமெய் யழுக்கை யருச்சனை யென்னும் புனலினாற் கழுவா வசுத்தனே னுய்யுநா ளுளதோ விருப்பொடு வெறுப்பிங் கிலாதவ னென்ன வெண்மதி யோடுவெண் டலையும் விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன் விருந்துணுங் கொன்றைமென் மலரோ டெருக்கையு மணிந்து மின்னொளி கடந்த வீர்ஞ்சடைப் பாந்தணா ணுடையாய் இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(6) |
|