|
திருமா மறையு மாகமமுந் தெருட்டு பொருளோர் முடிவாகத் தெளிவில் சமயர் தமின்முரணித் தியங்கி யபேதம் பேதமென வருமால் வாத மயலொழிய மலர்வாய் மலரப் பெருங்கருணை வடிவாய் வந்த சிவஞான வள்ள லிணைத்தாண் மலர்க்காக்க கருமா முடக்கொம் பொழுகமுதக் கதிர்வெண் டிங்கட் கண்ணிபுனை காலத் தவன்சே வடியிற்செங் கமல விழியொன் றிடந்தணிந்தும் பொருமா மழவெள் விடையாகிப் பொறுத்துந் தொழும்பு தலைநின்ற பொன்னந் திருமார் புடைக்கமஞ்சூற் புயல்வண் ணத்தெம் பெருமானே.
|
(1) |
|