|
திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின் நீழல்வா யுண்ட நிகரிலா னந்தத் தேன்றேக் கெறியுஞ் செய்யமா ணிக்க வாசகன் புகன்ற மதுர வாசகம் யாவரு மோது மியற்கைத் தாதலின் பொற்கல நிகர்க்கும் பூசுரர் நான்மறை மட்கல நிகர்க்கு மதுர வாசகம் ஓதின் முத்தி யுறுபயன் வேத மோதின் மெய்ப்பய னறமே.
|
(32) |
|