|
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
தேக்குறு கருணைப் பெரியநா யகிதன் றிருமுலை சுரந்தபான் மதுர வாக்குறு மழகன் ஞானசம் பந்த வள்ளலுண் டிடவவன் கடைவாய்ப் போக்குற வொழுகுந் திவலையொன் றடியேன் புண்ணிய வசத்தினாற் கிடைப்பில் தாக்குறு புலன்வென் றுன்னடி யவருட் டங்குவன் வெங்கைகா வலனே.
|
(61) |
|