முகப்பு தொடக்கம்

நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி
        நவையிலை யமுதமாடி
    நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே
        நறுநெய்பா றயிராடியே
மெல்லமலர் மதுவாடி யின்கழைச் சாறாடி
        மென்பழச் சாறாடியே
    விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி
        விதியினமை நபனமாடி
ஒல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல்
        லுத்திகொடு பைத்ததலைய
    வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருபுடை
        யொதுங்கவிட மின்றியசைய
அல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ
        யபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(9)