முகப்பு தொடக்கம்

நாவலர் புகழ்சிவ ஞான தேசிக
எவ்வ மகன்ற சைவ நாயக
நின்னடிக் கமல நெஞ்சுற விருத்தி
நறுமலர் தூவி நாடொறும் பரவுதூஉம்
செல்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்கும்
காகிற் றீம்பால் கமர்கவிழ்த் தாங்கு
பாப்பல பன்முறை பாடிநின்னைப்
பாடா மாந்தர் பக்கல்
கூடா வடியரிற் கூட்டுக வெனவே.

இது ஒன்பதடி நேரிசையாசிரியச்சுரிதகம்
(1)