முகப்பு தொடக்கம்

நின்புகழ் பாடும் பாணனார் தமக்கு
        நிதிதரச் சேரலன் றனக்க
    நீமுன முடங்க லொன்றளித் ததுபோ
        னிகரிலா வசவநா யகன்றன்
அன்பினி லொருநூ றாயிரங் கூறிட்
        டடுத்தகூற் றினிலொரு கூறிங்
    களிப்பதற் குனது திருமுக மருளா
        லடியனேற் களிக்குநா ளுளதோ
பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப்
        புரிசடைப் பேரருட் குன்றே
    புணர்முலைக் கயற்கட் பிறைநுதற் கனிவாய்ப்
        பொற்றொடி யிடத்துவா ழமுதே
என்பும்வெண் டலையு மணிந்துநான் புனித
        னென்றுமென் றிருந்திடு பவனே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(9)