|
சம்பிரதம். எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
நிந்தையறும் படிமுழுது மளப்பம் வாங்கி நெடுவரையொன் றெடுப்பமெழு கடலை யள்ளிச் சிந்துவமல் லியினலரி யாக்க வல்லோஞ் செய்குவமென் றயன்போனாற் றிசையும் பாரேந் தந்தையினு மினியசிவ ஞான தேவன் றன்கருணை கொண்டெளிதிற் றருக்கர் கூறும் ஐந்தணுவி லோரணுவு ளண்ட முண்ட வம்புகொளுஞ் சம்புவைநா மடக்கு வோமே.
|
(83) |
|