முகப்பு தொடக்கம்

நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன் றருமிரு நாழிநெல்லால்
வினைமாட்சி கொண்டுயி ரெல்லா மளித்தருண் மேன்மையினால்
மனைமாட்சி யெய்து முனக்கே பெருங்கற்பு மாட்சியன்றிப்
பினைமாட்சி யார்க்குண் டுலகீன்ற குன்றைப் பெரியம்மையே.
(17)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

நெடிய விலங்க லொருசிலை யாக்கிய நின்பதிமேற்
கொடிய வநங்கன் சிலைபோ யெடுத்துமுன் கொண்டெதிர்ந்த
ஒடிவி லருஞ்சிலைச் செங்கரும் போசொல் லுனதுநடுப்
பிடியு ளடங்கிய தென்னிது குன்றைப் பெரியம்மையே.
(18)