முகப்பு தொடக்கம்

நனவா வொருசிவ மோதிறை தாலோ தாலேலோ
       நவினா வலர்புகழ் மாலைய தாலோ தாலேலோ
கனவா வுலகுறு தேசிக தாலோ தாலேலோ
       கதிர்வே லவன்மயி லாசல தாலோ தாலேலோ
மனவா சகவினை மேவிலி தாலோ தாலேலோ
       மதனா டல்கொலடன் மாதவ தாலோ தாலேலோ
சினவா வருளித யாலய தாலோ தாலேலோ
       சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.
(10)