முகப்பு
தொடக்கம்
நற்றவ ராக மறையவ ராகவிந் நானிலத்தில்
அற்றவ ராக மனமுடை யார்க்கன்றி யச்சமற
உற்றவ ராக மறியா தொளித்தநின் னொண்பதங்கள்
பற்றவ ராகம லாலயன் போற்றும் பழமலையே.
(57)