முகப்பு தொடக்கம்

பகழிபுரை மைக்க ணளிவீழ் பனிமலர் முடித்த குழல்வார்
       படுமுகிழ் முலைத்தி ருவொடே பனிமதி நிறக்கொ டியனாள்
புகழ்வரை தவத்தின் வருமோர் புதல்விசெவி யிற்ப ருகுபால்
       புரையுமழ லைச்சொன் மணிவாய் புகலவவள் கட்கி னியனாய்
மகிழ்மக வினுக்க மையுமா மணியணி யுறுப்பு றவுலாய்
       வருமரு மகத்த னிமைபோ யொழியமணி முத்த ருவிதாழ்
திகழுமயி லைக்க ணுறுவாய் சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராய் சிறுவறை முழக்கி யருளே.
(9)