|
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
படத்தினிற் பொதிந்த குடத்துவெள் ளெலும்பு பரிந்துபெண் ணாக்கவு மறியா பரவையிற் புணைபோன் மிதந்துவந் தணையப் பருங்கல்பண் ணாக்கவு மறியா வடுத்துல கனைத்தும் பரவுற மறைந்த வரியகண் ணாக்கவு மறியா அமலவென் கவிக ளடியனேன் மனத்தை யளிந்தபுண் ணாக்கவே யறியும் எடுத்தசங் கதனை விடுத்திவற் றெதனை யெடுப்பமென் றரியுள மருள விவர்ந்திடு மெகின்விட் டிவற்றெதை யூர்வ மெனவயன் கருதுறக் குவளை விடுத்திவற் றெதனைப் பறிப்பமென் றுசாவ வின்மதன் பணிலம்வா லெகினம் விரிந்ததண் குவளை பரந்தவொண் பழன வெங்கைவா ழெங்கணா யகனே.
|
(46) |
|