|
சம்பிரதம். எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
பலவரைகள் கரத்தடக்கிக் காட்டுவோ நீர் பார்ப்பவநே கங்கடலை யருந்து வோநாம் இலகுறநும் மனையிடத்தி னுலோக மெல்லா மிக்கணமே காட்டிடுவோ முலகி லெண்ணில் கலையறிவோ மொருகாலும் பொய்ம்மைபகர்ந் தறியோங் கண்ணனெனு மவன்வாயின் மண்விழுமுன் னருளால் அலையிலெழுங் கடுமிடற்றி னடக்கு மீச னமர்ந்ததிரு வெங்கையினின் றடைந்து ளோமே.
|
(29) |
|