|
பாயுங் கவனக் கடியமனப் பரிகா வாமற் கொடுவிடயப் பகைகா வாமற் பிறருரைக்கும் பழிகா வாம லிருதாளுந் தேயும் படிசென் றிடையின்றிச் செல்வச் செருக்கர் கடைகாக்குஞ் சிறியேற் காக்குஞ் சிவஞான தேவன் றிருமே னியைக்காக்க வாயும் மனமுந் தொடர்வரிதாய் வருதல் போத லிரவுபகல் வளர்தல் குறைதல் வெறுப்புவப்பு வறுமை செல்வ மிலாததனை ஆயுந் தமிழக் குறு முனிவற் கறித லறித லிலாமைபோ யறிவே யாகி யுலகொழிய வருள்செய் சுடர்வேற் பெருமாளே.
|
(5) |
|