|
பாவகப் படுபெரும் புகழிமய மலைபெறு பவானிவளர் திருமுலைத்தண் பாலுண்டு தண்டையந் தாள்சிவந் திடவாதி பகவன்வியன் மார்பினுலவிப் பூவகப் பள்ளியமர் தருபுங் கவன்றலை புண்படக் குட்டிநீடு பொன்னங் குவட்டுமா யிருஞால முடிவைத்த புழையெயிற் றரவசைத்து மாவலர்ச் செங்கைகொடு சிறுதே ருருட்டியுயர் வானவர்க் கிடர்விளைத்து வலிகொண் டிருந்தவன் றிறலசுரர் தலைவெட்டி வட்டாடு மொருவெற்றிவேல் சேவகப் பிள்ளைதுணை யாகவிளை யாடுவாய் செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(4) |
|