|
பாரி னிற்பெருஞ் செல்வமுண் பவர்க்கெனப் பற்றிநின் றுண்ணாமற் பனைப ழுத்ததற் கொக்குமூர் நடுநயப் பண்பினோன் றிருவென்னுஞ் சீர் யற்படு மொழியெமக் கல்லது திருவுடை யோர்தம்மிற் சிலர்க்கு ரைப்பது முகமனென் றுணர்த்துறு செய்கையொன் றுடையோனே கூரி சைப்படா விவறன்மா லையனிடைக் குறுகுறா தீவோர்கட் குறுகு வாரிற்சண் பகம்விடுத் தொள்வழைக் கொத்தில்வேள் சிலைவாங்கும் நாரி மொய்த்தெழு மயிலைமால் வரைக்கொரு நாயகா தாலேலோ நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ ஞானியே தாலேலோ.
|
(7) |
|