முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பிறந்தான் மேலு மிடிதீர்நோய் தீரென் றெமைப்பின் றொடர்வனென
அறிந்தாய் போலுஞ் செம்பவளத் திருவாய் மலர்ந்தென் னகந்திருத்தி
இறந்தார் ஞால மிசைப்பிறவா முதுகுன் றகலா தெனைவைத்தாய்
சிறந்தார் வாய்மைச் சிவஞானிப் பேரோய் தீராச் சீரோயே.
(66)