|
எண்சீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம் |
|
புரளுந்திரை யெறியுங்குரை கடலும்பகை தமிழோன் பொதியம்பகை மதியம்பகை மதனன்பதை முலைசேர் தரளம்பகை பனையன்றில்கள் பகையங்குயில் பகையே தமரும்பகை யனையும்பகை சகியும்பகை நகர்வாழ் திரளும்பகை மலர்சிந்திய வணையும்பகை பனிநீர் திமிருங்குளிர் களபம்பகை யனிலென்செய வடியேன் அருளுஞ்சுக மருள்கின்றிலர் பெயர்சங்கர ரெனவே யணிவெங்கையி லமர்கின்றவ ரதுமென்குறை யனமே.
|
(68) |
|